குண்டப்பா தொடர் 3 தேர்தல் நாயகன்

Sunday, July 15, 2012 9:07 AM Posted by பொய்யன் டிஜே
குண்டப்பா தொடர் 5
தேர்தல் வெற்றி நாயகன்

சென்ற தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் சீட் கிடைக்காமல் போனதால் இந்த தேர்தலில் எப்படியும் அதிமுக கூட்டணியில் தமுமுக நமக்கு சீட் ஒதுக்கும் என்று ஆவலுடன் இருந்தான். மமகவுக்கு மூன்று சீட் உறுதியானதும் தனக்கு ஒரு சீட் தனக்கு நிச்சயம் என்று நப்பாசையுடன் தாயகம் வந்தான்.

முன்பு இவனை விட்டு ஆழம் பார்க்கவே தமுமுக இவனுக்கு ஆசை வார்த்தை காட்டியது என்பதும் இப்போது அதன் தலைவர்களே தேர்தல் வெறி பிடித்து அலைகிறார்கள் என்பதும் இவனுக்கு காலம் கடந்து தான் தெரிந்தது. வாத்தியாரிடமும் ஹைதரிடமும் கெஞ்சிப்பார்த்தான். மீண்டும் காலில் விழுந்து பார்த்தான், ஆனால் இவனுக்கு சீட் கொடுக்கவில்லை.

அத்தோடு இவன் ஒதுங்கிக் கொண்டு இருந்தால் இவன் மாபெரும் செல்வாக்கு பெற்றவன் என்று படம் காட்டிக் கொண்டு இன்று வரை சீன் காட்டிக் கொண்டு இருக்க முடியும். ஆனால் இவன் பாளை தொகுதியில் சுயேட்சையாக போட்டி இட்டு தனது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை தேனே நிரூபித்துக் காட்ட சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டான்.

இது குறித்து இவன் வெளியிட்ட நோட்டீஸைப் பாருங்கள்.

இவனுக்கு மூளை குழம்பி விட்டதா? அல்லது மக்களை மெண்டல்கள் என்று கணக்குப் போட்டுள்ளனா என்று குழப்பம் அதைப் படிப்பவர்களுக்கு ஏற்படும்.

இதோ அவனது தேர்தல் பிரச்சார நோட்டீஸ்

மேலப்பாளையத்தைச் சார்ந்த ஒருவர் எம்.எல்.ஏ. ஆகக்கூடாதா? சிந்திப்பீர்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹிக்கு பீரோ சின்னத்தில் வாக்களிப்பீர்.


தண்ணீர் பஞ்சத்தை முதலில் தீர்த்து வைப்பேன்.


பாளைத் தொகுதிவாழ் வாக்காளர்களுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும். இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு நீங்கள் பீரோ சின்னத்தில் வாக்களித்து தேர்வு செய்தால் இந்த தொகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை முதலில் தீர்த்து வைப்பேன். கடல் நீரை குடி நீராக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம் என அரை நூற்றாண்டு காலமாக அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யாரும் செய்து காட்டவில்லை. நாம்; செய்து காட்டி இருக்கிறோம்.

அகோபினாவை விட நல்ல ருசியான நீர்.

அரபு நாடுகளிலுள்ள மாநகரங்களில் மட்டும்தான் குழாய்கள் மூலம் குடிநீர் கிடைக்கும். கிராமங்களில் கிடைப்பதில்லை. சமீப காலமாக அப்படிப்பட்ட பாலைவன கிராமத்தில்தான் நாம் பணி புரிந்தோம். நிலத்தடி நீரில் குறைந்தது 3இல் ஒரு பாகம் குடி தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை 5 அடுக்கு தானியங்கி வடிகட்டிகள் மூலம் வடிகட்டி குடிநீராக்கி கொடுத்துள்ளோம். அந்த நீரை பெப்ஸி கம்பெனி ஊழியர்களே குடித்து விட்டு அகோபினாவை விட நல்ல ருசியான நீர் என்று பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ருசியான நீர் தொகுதி முழுவதும் கிடைக்க வழி செய்யப்படும்.

தண்ணீர் பஞ்சம் முழுமையாக நீக்கப்படும்.
150
முதல் 200அடி போரிங் ஆழத்தினுள் தானியங்கி மோட்டார் போடப்படும். தண்ணீர் டாங்கியில் நீர் குறைய குறைய பூமிக்குள் உள்ள மோட்டார் தானாக இயங்கி தண்ணீரை டாங்கியில ஏற்றிக் கொண்டே இருக்கும். இதை மேலப்பாளையம் பஷீர் அப்பா தெருவைச் சார்ந்தவர்களால் எளிதில் அறிய முடியும். அந்த தெருவைச் சார்ந்த பலர் மதாம் என்ற பாலைவன பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பாலைவனத்திலேயே தண்ணீர் பஞ்சத்தை நீக்கியவன் நான். அப்படிப்பட்ட நான் வென்றால் இந்த திட்டத்தின் மூலம் தொகுதி முழுவதும் ஒவ்வொரு தெருவிலும் தானியங்கி மோட்டார் போட்டு தண்ணீர் பஞ்சம் முழுமையாக நீக்கப்படும்.

நெல்லை கூவமாக மாறிவரும் பாளையங்கால்வாய்.
பாளையங்கால்வாய் நெல்லை கூவமாக மாறிவருகிறது. எனவே அதன் ஓரங்களில் சிமெண்ட் சுவர்கள் கட்டப்படும். படித்துறைகள் சரி செய்யப்பட்டு சீரமைக்கப்படும். இதன் மூலம் நெல்லை கூவமாக பாளையங்கால்வாய் மாறிவருவது தடுக்கப்படும். பாளையங்கால்வாயை சீர் செய்வதோடு சுகாதாரக் கேடுகளும் முற்றிலுமாக ஒளிக்கப்படும். தொகுதியில் தொழில் கல்வி கூடங்கள் அமைக்கப்படும். தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்.

ரெயில்வே கிராஸிங்களில் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலம்.
ரெயில்வே கிராஸிங்களில் ரயில் வரும்போதெல்லாம் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலம் உள்ளது. தொகுதி முழுவதுமுள்ள கிராஸிங்களில் சப்வே அல்லது மேம்பாலம் அமைத்து மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலம் நீக்கப்படும். இப்படியாக தொகுதியின் எல்லா வகையான அவலங்களையும் நீக்கி தொகுதியின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவேன். இது எல்லோரையும் போல் ஓட்டுக்காக அளிக்கும் வாக்குறுதி அல்ல. இதை எனது கடந்த கால செயல்பாடுகளை உங்கள் நினைவுக்கு கொண்டு வருவதன் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

நகரில் 3 தண்ணீர் டாங்கிகள்.

நகரில் 3 தண்ணீர் டாங்கிகள் அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் போட்டு கிடப்பில் கிடந்தது. இதை அறிந்த நான் 2000ஆண்டில் தி.மு.க. தலைமைக் கழக பொறுப்பிலிருந்த வி.கருப்பசாமி பாண்டியன் அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன். எங்கள் தெரு ஊர் கொந்து தலைவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். நகரில் 3 தண்ணீர் டாங்கிகள் உடனடியாக அமைய வழி செய்தேன்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாளையத்துக்கு பஸ்.

1994
இல் தர்மலிங்கம் M.L.A. அவர்களை என் வீட்டுக்கு அழைத்து வந்து சர்வ கட்சியினர் முன்னிலையில் தொகுதி முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய கோரிக்கை வைத்தோம். உடனே சாலைகள் சரி செய்யப்பட்டன. 2004இல் மஹ்பூப்ஜான் மூலம் அமைச்சர் நயினாநாகேந்திரன் அவர்களை சந்தித்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாளையத்துக்கு பஸ் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அது நிறைவேற்றப்பட்டது.

பொய் வழக்கில் சிக்கிய மாணவனின் விடுதலைக்காக.

2007
இல் சதக்கதுல்லா அப்பா கல்லுரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த மாணவன் மீது பொய் வழக்கு போடப்பட்டது. எந்த அமைப்பும் கண்டு கொள்ளவில்லை. பொய் வழக்கில் சிக்கிய அந்த மாணவனின் விடுதலைக்காக முழுமையாக பாடுபட்டோம். திரும்பவும் காலேஜில் சேர்க்கப்பட சட்ட ரீதியாக வழி செய்தோம். படித்து முடித்ததும் பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு அரபுநாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் விஸா ஏற்பாடு செய்து கேஷியர் வேலையில் சேர்த்து விட்டேன்.

த.மு.மு.க. நிறுவன தலைவர் குணங்குடி ஹனீபா.

பொய்வழக்கில் சிக்கிய மதுரை, திருச்சியைச் சார்ந்தவர்களுக்கும் குணங்குடி ஹனீபா சிபாரிசு செய்ததால் அவர்களுக்கும் விஸா ஏற்பாடு செய்து துபையில் வேலை வாங்கி கொடுத்துள்ளேன். த.மு.மு.க. நிறுவன தலைவர் குணங்குடி ஹனீபா பொய் வழக்கில் சிக்கி 13 ஆண்டு காலம் அநியாயமாக சிறையில் வாடினார். அவர் விடுதலையாகப் போகிறார் என்ற தகவல் வரும்வரை எந்த அமைப்பும் சிறை சென்று பார்த்து அவருக்கு ஆறுதல் கூறவில்லை. நான்தான் குடும்பத்துடன் சென்று ஆறுதல் கூறிவந்தேன். அவரது 2 பிள்ளைகளுக்கு விஸா ஏற்பாடு செய்து துபையில் வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு.

போலி விஸா மோசடியாளர்களிடம் சிக்கிய பலரை மீட்டுள்ளேன். குறிப்பாக 1983இல் நூஹு என்பவரிடம் எவ்வித ஆதாரமுமின்றி ஏமாந்தவர்களின் பணத்தை மீட்க எம்.எல்.எம். தலைமையில் சென்று பேசி டேப் ரிகார்டரில் பதிந்து ஆதாரமாக்கி பணத்தை மீட்டுக் கொடுத்தோம். சிக்கல் ஹாஜியார் என்பவரிடம் சிக்கியவர்களின் சிக்கலை தீர்க்க விஸா ஏற்பாடு செய்து கொடுத்தேன். 1979லிருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்.

தடா எதிர்ப்பு பேரணி மாநாடு.

1994-95
இல் அநியாயமாக தடாவிலிருந்தவர்களை யாருமே சென்று பார்க்கவில்லை. அந்த இருண்ட காலத்தில் அடிக்கடி குடும்பத்தோடு சென்னை சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன். சர்வ கட்சியினரையும் ஒன்றிணைத்து 1995இல் தடா எதிர்ப்பு பேரணி மாநாடு நடத்தினேன். காயல் மஹ்பூப் விடுதலைக்காக யாரும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தவில்லை. நாம்தான் போராட்டம் நடத்தினோம்.

கொண்டை சாகுல்.

1992
டிசம்பர் 7ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் கொண்டை சாகுல் உட்பட 35பேர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கு என 3இலட்சம் ரூபாயும். பொய் வழக்கில் சிறை சென்றவர்களின் வழக்குச் செலவுகளுக்கு என்று ஒரு லட்சம் ரூபாயும் சேகரித்து வழங்கினேன். அவர்களின் விடுதலைக்காக கடைசி வரை ஸ்டார் இபுறாஹீம் மூலம் பாடுபட்டேன்.

2006
இல் பாளைத் தொகுதி பெறப்பட்டது.

எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் நான் ஆற்றிய சேவைகளில் சிலதான் இவை. இப்படிப்பட்ட நான் எம்.எல்.ஏ.வாக வர வேண்டும் என்றுதான் 2006இல் பாளைத் தொகுதி பெறப்பட்டது. பிறகு பிரச்சனையாக ஆனது. பேட்டைக்காரருக்குத்தான் கொடுப்போம் என்று கொடுத்தார்கள். தொகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. திரும்பக் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர மேலப்பாளையத்துகாரனுக்கு கொடுக்க மாட்டோம் என்று திரும்பக் கொடுத்தார்கள்.

பேசிக் கொண்டிருந்தவரே வாரியத் தலைவராக ஆனார்.

பிறகு துணை மேயர் பதவி, வக்பு வாரிய தலைவர் பொறுப்பு அல்லது அதுபோல் ஒரு பொறுப்பு வாங்கி தரப் போவதாக வாக்குறுதி அளித்தார்கள். வக்பு வாரியம் வர இருக்கிறது எப்பொழுது அழைத்தாலும் வர வேண்டும் என்றார்கள். இப்படி துபைக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருந்தவரே வாரியத் தலைவராக ஆனார். காரணம் கேட்டபொழுது கோவை செயற்குழு தீர்மானம் என்றார்கள். செயற்குழுவில் அளித்த வாக்குறுதியை கூறி இருந்தால் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று செயற்குழுவினர் கூறி இருப்பார்கள் அதனால் கூறவில்லை. மீண்டும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வாய்ப்பு தருவோம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்கள்.

அனைத்துக்கும் தக்க சாட்சிகள் உள்ளனர்.

கடந்த 5 மாத காலமாக தலைமை நிர்வாகிகளில் ஒருவர் எனக்காக பாளைத் தொகுதி கேட்பதாக கூறி வந்தார். தனக்கு தொகுதி வேண்டும் என்பதற்காக இன்னொரு தலைமை நிர்வாகி பாளை தொகுதியை வாங்க மறுத்து கடையநல்லூரை கேட்கிறார். நாம் பஸ்லுல் இலாஹிக்கு பாளை தொகுதியை வாங்கி கொடுத்து விடுவோம். இப்படி பலவிதமாக கூறி வந்தார். அனைத்துக்கும் தக்க சாட்சிகள் உள்ளனர்.

இழித்த வாயனல்லவா மேலப்பாளையத்துக்காரன்.

24.2.11இல் கூடிய தலைமை நிர்வாகக் குழுவில் பாளைத் தொகுதி கிடைத்தால் மேலப்பாளையம் பஸ்லுல் இலாஹிக்கு கொடுக்கப்படும் என தீர்மானமாக சொன்னார்களாம். இரண்டாவது இன்னொன்றையும் தீர்மானமாக சொல்லி உள்ளார்கள் அது பாளைத் தொகுதியை பெறமாட்டோம் என்பது. ஆனால் இரண்டாவது சொன்னதை வெளியில் சொல்லக் கூடாது அது அமானிதம் என்றார்களாம். இழித்த வாயனல்லவா மேலப்பாளையத்துக்காரன்.

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒரு ஓட்டு மட்டுமே.

அ.தி.மு.க. தலைமையோ ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பாளைத் தொகுதியை முஸ்லிம் அமைப்புக்கு என்றே ஒதுக்கி வைத்திருந்தது. 15.3.11தலைமை நிர்வாகக் குழுவில் ம.ம.க. பொருளாளர் ஹாரூண் வாக்குறுதியை காப்பாற்றுங்கள் என்று கூறி இருக்கிறார். அன்று காலை கூடிய மாநில செயற்குழுவில் மேலப்பாளையம் பஸ்லுல் இலாஹிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று தஞ்சையை சேர்ந்த ஒருவர் மட்டும் பேசினாராம். தலைமை நிர்வாகிகள் நிற்க வேண்டும் என்பதற்குத்தான் அதிக ஓட்டு கிடைத்ததாம். வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்ததாம்.

வாக்குறுதியை காப்பாற்றி இருக்கலாமே.

2006இல் மு.லீக்கின் 3 சீட்டில் ஒரு சீட்டை மேலப்பாளையம் பஸ்லுல் இலாஹிக்கு கொடுங்கள் என்று சண்டையிட்டார்களே இன்று அவர்களிடமுள்ள 3இல் ஒன்றை கொடுத்தால் என்ன?

உடன்குடியை சேர்ந்தவர் ராமநாதபுரத்தில் நிற்கும்பொழுது மேலப்பாளையத்தைச் சார்ந்தவரை ராமநாதபுரத்தில் நிற்க வைத்து இருக்கலாமே.

மேலப்பாளையத்தவர்கள் நிறைந்து வாழும் திருவல்கேணியை உள்ளடக்கிய சேப்பாக்கத்தில் தோப்புத்துறையை சேர்ந்தவர் நிற்பதை விட மேலப்பாளையத்தைச் சார்ந்தவரை நிற்க வைத்து வாக்குறுதியை காப்பாற்றி இருக்கலாமே.

இந்த துரோகம் இன்று நேற்றல்ல காலம் காலமாக நடந்து வரக் கூடிய ஒன்றுதான்.

மேலப்பாளையம் என்ற பெயரில் இருந்த சட்டமன்ற தொகுதி.

அந்த வரலாற்று பின்னணியை பாருங்கள். 1971 வரை நமதூர் மேலப்பாளையம் சட்டமன்ற தொகுதி என்ற பெயரில் இருந்தது அப்பொழுது காங்ரஸிலிருந்தும் மு.லீக்கிலிருந்தும் எம்.எல்.ஏ.வாக ஆனார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. காங்ரஸிலும் மு.லீக்கிலும் மேலப்பாளையவாசிகள் இல்லாமல் இருந்தார்களா? என்றால் நிறையவே இருந்தார்கள்.

அள்ளிக் கொடுத்தவர்கள்.

காங்ரஸுக்காகவும் மு.லீக்குக்காகவும் பாடுபட்டவர்கள் சொத்துக்களை அள்ளிக் கொடுத்தவர்கள் யார்? T.S.M.O, M.A.S, E.M.O, M.L.M, M.O.A, V.S.T, L.K.S, L.K.M, M.K.L.S, என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அள்ளிக் கொடுத்தவர்கள் அத்தனை பேரும் மேலப்பாளையவாசிகள்தான். ஆனால் யாருக்கும் எம்.எல்.ஏ.வாக ஆகும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

ஆர்.எம்.ஏ. சமது, த.மு.சா.

1977
க்குப் பிறகு நமதூர் பாளையங்கோட்டை தொகுதி என்றானது. அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை அ.தி.மு.க.வை எடுத்துக் கொள்வோம். ஆர்.எம்.ஏ. சமது, த.மு.சா, ஓவியர், புலவர், ஷாஜஹான், ஹயாத், ஹைதர் அலி, மஹ்பூப் ஜான், M.K.M. புகாரி என பலர் சீட் கேட்டுள்ளார்கள். யாருக்குமே சீட் கொடுக்கப்படவில்லை.

செ.கா.மு, கி.மீ, வெ.இ.

தி.மு.க.வை எடுத்துக் கொள்வோம். 35ஆண்டு காலமாக நகரச் செயலாளராக இருந்தவர் செ.கா.மு.யூசுப், கட்சிக்காக சொத்தை இழந்தவர்கள் கி.மீ.காஜா, மைதீன் பிள்ளை போன்றவர்கள். நகரச் செயலாளராக இருந்த வெ.இ.நாகூர் மீரான் போன்றவர்கள் உழைத்து மறைந்து விட்டார்கள். ஆ.மு.பக்கர், V.S.T. hகுல் ஹமீது, சேமட்டை முஹம்மது மைதீன், மு.லீக்கில் L.K.S. மீரான் மைதீன் M.K.hபி என பலர் இன்று வரை சீட் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். யாருக்குமே சீட் கொடுக்கப்படவில்லை.

சேனாதிபதி மைதீன் பிச்சை.

1988
இல் மு.லீக்கிலிருந்து லத்தீப் பிரிந்தபொழுது கடும் எதிர்ப்பில், கொட்டும் மழையில், கரண்டு கட்டான நிலையில், ஜெனரேட்டர் போட்டு என்னுடன் நின்று கூட்டம் நடத்தியவர்கள் நிஜாமுத்தீன் ஆலீம், மொன்னி மைதீன் பிச்சை போன்றவர்கள். கரண்டு கட்டானபொழுதெல்லாம் ஜார்ஜ் லைட்டை தூக்கி பிடித்துக் கொண்டு கூட்டம் முடிய நின்றவர் மொன்னி மைதீன் பிச்சை. அப்துல் லத்தீப் அவர்களால் சேனாதிபதி மைதீன் பிச்சை என அழைக்கப்பட்டார்.

மேலப்பாளையத்தைச் சார்ந்தவருக்கு சீட் தர மறுத்து விட்டார்.

1996
இல் மு.லீக் லத்தீப் அணிக்கு பாளைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. 1988லிருந்து லத்தீப் அணியில் செயலாற்றிய சேனாதிபதி மொன்னி மைதீன் பிச்சை அவர்களுக்கு சீட்டு கொடுக்குமாறு லத்தீப்பிடம் கெஞ்சினோம். எம்.எல்.ஏ.வாக ஆகும் வாய்ப்பை மேலப்பாளையத்தைச் சார்ந்தவருக்கு தர மறுத்து விட்டார். அந்த நிமிடம் வரை சமது அணியிலிருந்த பேட்டைக்காரருக்கு சீட்டைக் கொடுத்தார்.

தி.மு.க.வின் போர் வாளாக இருந்த வை.கோ.

1989
இல் மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சார்ந்த குருநாதன் அவர்கள் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு எப்படி சீட் கிடைத்தது. அப்பொழுது தி.மு.க.வின் போர் வாளாக இருந்த வை.கோ. அவர்கள்தான் போராடி சீட் வாங்கி கொடுத்தார்கள். அதுபோல் 1984இல் ஏ.ளு.வு. ஷம்சுல் ஆலத்துக்கு சீட் கிடைத்ததும் போராடியதினால்தான். 1971க்குப் பிறகு மேலப்பாளையம் பாளைத் தொகுதியை எண்ணிப் பார்க்காத மு.லீக் தலைமையுடன் அன்றைய இளைஞரணியினராகிய நாங்கள் போராடினோம்.

எங்களைப் போன்ற போராளிகள் எந்த அமைப்பிலும் இல்லை.

நிஜாமுத்தீன் ஆலீம், சேனாதிபதி மைதீன் பிச்சை, தீன் சுடர் ஷம்சு போன்ற இளைஞர் அணி பொறுப்பாளர்களை இயக்கினோம். பாளைத் தொகுதியைப் பெற்றோம். அதன் பிறகு என்ன நடந்தது. சென்னையிலிருந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தனர். மேலப்பாளையத்தைச் சார்ந்தவருக்கு சீட் இல்லை எனில் மு.லீக் கலைக்கப்படும் என அறிவித்தோம். தலைமை பணிந்தது. V.S.T. ஷம்சுல் ஆலத்துக்கு சீட் கிடைத்தது. இப்பொழுது எங்களைப் போன்ற போராளிகள் எந்த அமைப்பிலும் இல்லை. அதனால்தான் தொகுதிச் சீட்டுகள் ஏலச் சீட்டுகளாக ஆகி மேலப்பாளையவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

முதன் முதலாக துவக்கி வைத்தது யார்?

80
லட்சம் ரூபாய்க்கு நாங்கள் பித்ரா அரிசி வினியோகித்தோம். நாங்கள் 90லட்சம் ரூபாய்க்கு வினியோகித்தோம். அதுபோல் குர்பானிகள் பற்றியும் அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகள் வெளியிடுகின்றன. தாயகத்தில் உள்ள ஏழைகளை மனதில் கொண்டு இந்த திட்டங்களை சிறிய தொகையோடு முதன் முதலாக துவக்கி வைத்தது யார்? கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியாகிய நான்தான் 1986இல் துவக்கினேன்.

உங்கள் கைகள் தானாக பீரோ சின்னத்தில் ஓட்டுப் போட்டு விடும்.

அப்படிப்பட்ட நான் மேலப்பாளையவாசிகளுக்கு சீட்டு கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எந்த அமைப்பையும் தூற்றவோ, எந்த இயக்கத்தையும் தூக்கி பிடிக்கவோ நான் நிற்கவில்லை. இனிமேலாவது மேலப்பாளையவாசிகளுக்கு சீட்டு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு வாக்களியுங்கள். இறையருளால் மேலப்பாளையவாசிகளுக்கு விடிவு காலம் பிறக்கும். எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் நான் ஆற்றிய சேவைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள் உங்கள் கைகள் தானாக பீரோ சின்னத்தில் ஓட்டுப் போட்டு விடும்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி.

சிவப்பு எழுத்தில் உள்ள வாசகங்களை பார்த்தால் ஒரு பிரதமரோ முதல்வரோ தான் செய்ய முடியுமான காரியங்களைச் செய்வேன் எங்கிறான்.

அரபு நாட்டின் அதிபராக இவன் இருப்பது போலவும் பீலா விடுகிறான்.

தனக்கு தமுமுக செய்த துரோகம் எனப் பட்டியல் போட்டு தனது பதவி வெறியை அம்ப்பலப்படுத்துகிறான்.

இஸ்லாம் ஒழித்துக் கட்டிய ஊர் வெறியை ஊட்டுகிறான்

சென்ற தேர்தலில் தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் வள்ளல்களாகப் போற்றி அவர்களின் ஆதரவுக்காக கெஞ்சுகிறான்.

தனிப்பட்ட நபர்களுக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டி அவர்களின் மனதை நொறுக்குகிறான்.

தான் செய்த உதவிகளுக்கு மறுமையில் நன்மையை எதிர்பார்க்காமல் இம்மையிலேயே ஓட்டுப் பிச்சை கேட்கிறான்.

இப்படி ஒரு கேடு கெட்ட இழுபிறவிகளை எந்த அரசியல் கட்சியிலும் நீங்கள் பார்க்க முடியாது.

இப்படி பீலா விட்டி பில்டப் கொடுத்து இவன் பெற்ற வாக்குகள் என்ன?

ஒரு லட்சத்துக்கு மேல் முஸ்லிம்கள் வாழும் இத்தொகுதியில் இவன் பணத்தை வாரி இறைத்து பெற்ற வாக்குகள் பட்டியலைப் பாருங்கள்

இது தான் இவனது செல்வாக்கின் இலட்சனம். இவனைப் போல் பில்டப் கொடுக்காத பல சுயேட்சைகள் 7032, 6939, 2624, 1000, 983, வாக்குகள் வாங்கியிருக்க இவன் 525 வாக்குகள் பெற்று கேவலப்படுள்ளான். உள்ளூரிலும் இவனுக்கு ஒரு செல்வாக்கும் இல்லை. இவனை விட செல்வாக்கு உள்ள முஸ்லிம் சுயேடசைகள் இவ்வூரில் உள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.

முக்கிய அறிவிப்பு

தான் கடுமையாக எதிர்த்து வந்த ஜாக் இயக்கத்தின் காலில் விழுந்து, தன் மீது திருட்டுக் குற்றம் சாட்டி நீக்கம் செய்த தமுமுகவுக்கு பாத பூஜை செய்து, முஸ்லிம்லீக்கிற்கும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து கருணாநிதியையும் கடவுளாக்கும் வகையில் சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் முன்வந்த மானம் கெட்ட அயோக்கியன் குண்டப்பா மற்றவர்கள் மீது அவதூறு கூறி தன்னை மகாத் தூயவனாக காட்டிக் கொள்கிறான்.

இவனுக்கு எதிராக இத்தனை விமர்சனங்களை நாம் வைத்த பின்னரும் ஒன்றுக்கும் இவன் வாய் திறக்கவில்லை. இவனுக்கு மானம் ரோஷம் கடுகளவாவது இருந்தால் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டாமா?

இவன் இப்போது யாருக்கு முட்டுக் கொடுக்கின்றானோ அவர்கள் குறித்து இவன் செய்த விமர்சன்ங்களுக்கு பதில் தர வேண்டாமா?

இனியும் இவனுக்கும் இவனது குடும்பத்துக்கும் எதிராக நாம் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் சொல்ல் தயார் என்று இவன் அறிவிக்க வேண்டாமா?

ஒன்றுக்குமே இவன் வாய் திறக்கவில்லை.

அதே நேரத்தில் இந்தத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து அவன் மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தி விட்டதாக தெரிகின்றது.

இவன் பதில் சொல்ல முன்வந்தால் நாம் தொடர்ந்து இவனை விமர்சிப்பதற்கு தூண்டுதலாக இருக்கும்.

அல்லது மற்றவர்கள் மீது அவதூறு கூறுவதைத் தொடர்ந்தால் நாமும் தொடர்ந்து இவனைப் பற்றி ஏராளமான விஷயங்களை புட்டு புட்டு வைப்பதில் நியாயம் இருக்கும்.

அவ்வாறு இல்லாவிட்டால் செத்த பாம்பை அடிப்பதாக ஆகி விடுமோ என்று நாம் கருதுகிறோம்.

இவன் மவ்னமாக யாரைப்பற்றியும் அவதூறு கூறாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று நடந்து கொண்டால் இவனைப் பற்றிய தொடர் தற்காலிகமாக இத்துடன் நிறுத்தப்படும்.

இவனிடம் மாற்றம் இல்லாவிட்டால் மற்றவர்களின் மானத்துடன் விளையாட ஆரம்பித்தால் இவனைப் பற்றிய தொடர் மீண்டும் ஆரம்பமாகும். இவன் இதற்கு முன்னர் ஒவ்வொருவரைப் பற்றியும் என்ன எழுதினான்? என்பதை வெளியிட்டு இவனைப் போன்ற அயோக்கியன் ஒருவனும் இல்லை என்று நிரூபிக்கும் நிலைக்கு நம்மைத் தள்ளமாட்டான் என்று நம்புகிறோம்.

இவன் திருந்திவிட்டால் இத்தொடர் நிறுத்தப்படும். இவன் பழையபடி மற்றவர்களின் மானத்துடன் விளையாடினால் அவனைப் பற்றியும் இவனது குடும்பம் பற்றியும் இன்னும் அதிரடையான உண்மைகள் ஆதாரத்துடம் அம்பலப்படுத்தப்படும். இன்ஷா அல்லாஹ்

0 Response to "குண்டப்பா தொடர் 3 தேர்தல் நாயகன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..