காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை...

Thursday, October 25, 2012 2:53 AM Posted by பொய்யன் டிஜே
காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை... ஆம் ஜாக்கின் முகமூடியை தான் காணவில்லை.. கண்டெடுத்தவர்கள் சென்னை புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஜாக் தலைமை அலுவலகத்தில் ஒப்படையுங்கள்.

இத்தனை நாள் தவ்ஹீத் என்ற முகமூடி போட்டு கொண்டு, இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று வியாக்கியானம் பேசி நாம் நடத்தும் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லால் அதில் கலந்து கொள்ளும் எம் சகோதரிகளையும், தாய்மார்களையும் கொச்சையாக மோசமாக பேசி பித்னா செய்வதையே தொழிலாக கொண்டவர்கள் இன்று குமரியில் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்து மார்க்கம் அனுமதிக்காத உண்ணா விரத போராட்டம் (பார்க்க : தினத்தந்தி குமரி எடிசன் 14.09.2012), தென்காசியில் 28.09.2012 அன்று மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் (பார்க்க போஸ்டர்) செய்து அவர்களுடைய முகமூடியை தொலைத்து விட்டார்கள். இனி எந்த முகமூடி போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜாக் சகோதரர்களே சிந்திக்க மாட்டீர்களா?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் - 61:2,3)

0 Response to "காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை..."

Post a Comment

அதிகம் பார்த்தது..